புதுச்சேரியில் முதல்வர் & எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

புதுச்சேரியில் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியானதால் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

புதுச்சேரியில் முதல்வர் & எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
முதல்வர் நாராயணசாமி
  • Share this:
கொரோனா நோய் தொற்று அதிகமான சூழலில் கடந்த ஏப்ரல் 23 ம் தேதி புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டப்பேரவையின்  பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா உறுதியானது.

இதனால் அனைத்து உறுப்பினர்களுக்கு சட்டமன்ற கமிட்டி அறையில் முதல்வர் ,சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

முதலில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு முதலில் எடுக்கப்பட்டது. தொடர்ந்து சட்டமன்ற ஊழியர்களுக்கும் செய்தியாளர்களும் பரிசோதனை எடுக்கப்பட்டது.


இதனிடையே எம்.எல்.ஏ ஜெயபாலுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் 7 நாட்கள் தனிமையில் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்பேரில் பல எம்.எல்.ஏ.க்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் வீடுகளிலும், சில எம்.எல்.ஏ.க்கள் தனியார் விடுதிகளிலும் தங்கியுள்ளனர். சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி அறைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர், 20 தீயணைப்பு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.Also read... ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு விலையில்லா முகக்கவசங்கள் - திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர்

புதுவை தீயணைப்பு நிலையமும் 48 மணி நேரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கிருமிநாசினி தெளிக்காமல் தீயணைப்பு நிலையத்திலிருந்து எந்த வாகனத்தையும் வெளியே எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு தகவல்கள் வந்தால் அதனை மாற்று தீயணைப்பு நிலையத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading