முடிவுகளை பதிவு செய்வதில் குளறுபடி: மெட்ஆல் கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து!

மாதிரிப் படம்

4 ஆயிரம் கொரோனா மாதிரிகளை  ஐசிஎம்ஆர் இணையதளத்தில் தவறாக  பதிவேற்றிய புகாரை அடுத்து தனியார் பரிசோதனை மையமான  மெட்ஆல் நிறுவனத்தின் கொரோனா பரிசோதனைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது

  • Share this:
    ma4 ஆயிரம் கொரோனா மாதிரிகளை  ஐசிஎம்ஆர் இணையதளத்தில் தவறாக  பதிவேற்றிய புகாரை அடுத்து தனியார் பரிசோதனை மையமான  மெட்ஆல் நிறுவனத்தின் கொரோனா பரிசோதனைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையம் உள்ளது. இவற்றில் மெட்ஆல் நிறுவனமும் ஒன்றாகும். இந்நிலையில்,  கொல்கத்தாவில் இருந்து பதியப்பட்ட கொரோனா மாதிரிகளை கள்ளக்குறிச்சியில் இருந்து பதிவு செய்ததாக மெட்ஆல்  நிறுவனம் மீது புகார் எழுந்தது.

    மேலும் கடந்த 19,20ம் தேதிகளில் இந்த நிறுவனம் 4 ஆயிரம் நெகடிவ் மாதிரிகளை, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தவறாக பதிவேற்றியுள்ளது. இதனால்  இந்தியாவிலேயே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ளது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

    இந்த புகார்கள் குறித்து ஆராய்ந்த அதிகாரிகள் ஐசிஎம்ஆர் மற்றும் அரசு விதிகளை  மெட்ஆல் மீறியுள்ளதை உறுதிசெய்தனர்.  மேலும் தவறான தகவல்களை பதிவு செய்து மருத்துவமனைகளிடம் இணைந்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் கொரோனா பரிசோதனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்வதுடன்,  3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தமிழக பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வ விநாயகம் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே தவறு நடந்துள்ளதாக மெட்ஆல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மற்றும் அதன் முடிவுகளை நோயாளிகளுக்கு தெரிவித்ததில் எந்த தவறும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களை பதிவேற்றம் செய்யும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் மெட்ஆல் நிறுவனம் கூறியுள்ளது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    First published: