• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா பரிசோதனைக்கு செல்பவர்களிடம் பெற வேண்டிய தகவல்கள் என்னென்ன?

கொரோனா பரிசோதனைக்கு செல்பவர்களிடம் பெற வேண்டிய தகவல்கள் என்னென்ன?

மாதிரிப்படம் (AFP)

மாதிரிப்படம் (AFP)

பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்தது

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற 30 பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றில் 12 அரசு பரிசோதனை மையங்களும், 19 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன.

மேலும்,  இம்மையங்களில் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் தகவல்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற gu.

இக்கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனி வருங்காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டால் பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது விட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வருகைதரும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் தகவல்களை அதற்கென உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலி மற்றும் CV வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்; சோதனை செய்ய வருபவர்களின் சுய விவரங்களை சேகரித்து அவர்களின் கையொப்பம் பெறு வேண்டும்; குறிப்பாக பரிசோதனைக்கு வருபவர்களின் பெயர் அவரின் முழு முகவரி, வயது, பாலினம் அவர்களின் தொழில் விவரம் மற்றும் குடும்பத்தினர் கடந்த 15 நாட்களில் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த விவரங்களை பரிசோதனை மையங்கள், மாநகராட்சிக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள 6,000 பணியாளர்கள் ஈடுபட உள்ளதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பரிசோதனை கூடங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பரிசோதனைக் கூடங்களில் ICMR வழிமுறைகளை பின்பற்றி அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகளை வழங்க வேண்டும். மேலும், பரிசோதனை மையங்களின் வாயில்களில் ICMR வழிமுறைகளை பின்பற்றி பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீடுகளுக்கே சென்று கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை சேகரிக்கும் பணியாபாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அந்தந்த பரிசோதனை மையங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: