திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை

திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட 11 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை
கொரோனா சோதனை செய்துக்கொள்ளும் திமுகவினர்
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 2:47 PM IST
  • Share this:
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டுராவ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த 24 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். 25 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தனக்கு  கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அந்த சந்திப்பின்போது உடன் இருந்த திமுக தலைமை கழக நிர்வாகிகள் பூச்சி முருகன், காஜா மற்றும் அண்ணா அறிவாலய மேலாளர்கள் பத்மநாபன் ஜெயக்குமார் உள்ளிட்ட 11 பேருக்கு இன்று அண்ணா அறிவாலயத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்திலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

படிக்க...Vijayakanth | விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியீடு..


ஏற்கனவே இந்த மாதம் தொடக்கத்தில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவப் பரிசோதனையில் உறுதியனது குறிப்பிடத்தக்கது.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading