• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் 3 வாரத்தில் 80 ஆயிரம் பேருக்கு பரிசோதனை - ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையில் 3 வாரத்தில் 80 ஆயிரம் பேருக்கு பரிசோதனை - ராதாகிருஷ்ணன் தகவல்

ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)

ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)

மற்ற நகரங்களைக் காட்டிலும் இங்கு கொரோனா சோதனையின் எண்ணிக்கை அதிகம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்து வரக்கூடிய நிலையில், கடந்த 26-ம் தேதியில் இருந்து இன்று வரை சென்னையில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நோய்தொற்று அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் பகுதிவாரியாக திட்டமிடல் பணிகளை மேற்கொண்டு கொரோனா கட்டுப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. கட்டுபடுத்தப்பட்ட பகுதியான ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட இந்திரா காந்தி நகர், கண்ணப்பர் திடல் பகுதியில் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டதோடு சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், இதுகுறித்து பேசிய சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 3,500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதிகமான மக்களை தேடித்தேடி பரிசோதனை செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பரிசோதனை மேற்கொள்வதன் காரணமாகவே தொற்று எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் வெற்றிகரமாக தொற்று பரவலைத் தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேபோல, கடந்த 26ம் தேதியில் இருந்து இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு சென்னையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், இந்தியாவில் மற்ற நகரங்களைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை என்பது மிக அதிகம் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: