மாவட்டங்களை மிரட்டும் கொரோனா பாதிப்பு - இன்றைய மாவட்ட வாரியாக விபரங்கள்

Corona | கடந்த 3 தினங்களாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் கண்டறியப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 4 ஆயிரத்திற்கும் மேலாக புதிய தொற்றுக்கள் உறுதியாகியுள்ளன.

மாவட்டங்களை மிரட்டும் கொரோனா பாதிப்பு - இன்றைய மாவட்ட வாரியாக விபரங்கள்
கோப்பு படம்
  • News18
  • Last Updated: July 9, 2020, 7:58 PM IST
  • Share this:
சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று 4,231 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று 65 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும்
3,994 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை உயிரிழப்பு 1,765 ஆகவும், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 78,161 ஆகவும் உள்ளது.

படிக்க: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

படிக்க: மருமகனை வரவேற்க 67 வகையான உணவுகளை சமைத்து அசத்திய மாமியார் - வைரல் வீடியோ


இன்று மட்டும் 41,038 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பரிசோதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
14,28,360 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 3 தினங்களாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் கண்டறியப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 4 ஆயிரத்திற்கும் மேலாக புதிய தொற்றுக்கள் உறுதியாகியுள்ளன.

குறிப்பாக சென்னையில் கடந்த சில தினங்களாக புதிய தொற்றுக்கள் குறைந்துள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது.

மாவட்ட வாரியாக விபரம்


விருதுநகரில் இன்று 289 பேருக்கும், திருவள்ளூரில் 364 பேருக்கும், தூத்துக்குடியில் 196 பேருக்கும், நெல்லையில் 110 பேருக்கும், மதுரையில் 262 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 254 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது அதே பாதிப்பு வேகம் பிற மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading