தனிமைப்படுத்தப்படும் கைதிகள்: புதுச்சேரி சிறைச்சாலையில் வேகமாக பரவும் கொரோனா..

புதுச்சேரி அரசும், சிறைத்துறையும் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளைப் பிணையிலோ அல்லது நீண்ட காலப் பரோல் விடுப்பிலோ உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்படும் கைதிகள்: புதுச்சேரி சிறைச்சாலையில் வேகமாக பரவும் கொரோனா..
புதுச்சேரி சிறைச்சாலை
  • Share this:
புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் 3 கைதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரையில் மொத்தம் 5 கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் மொத்தம் 158 பேர் உள்ளனர். இவர்களில் 14 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் உடனுக்குடன் விடுதலை செய்யப்படுவதில்லை. இத்தகையச் சூழலில் நேற்றைய தினம் காலாப்பட்டு சிறையில் 3 கைதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரையில் மொத்தம் 5 கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து புதுச்சேரி சமூக- ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று விடுத்துள்ள கூட்டறிக்கையில், காலாப்பட்டு மத்திய சிறையில் கடுமையான மன உளைச்சலில் இருந்து வரும் சிறைக் கைதிகளைப் புதுச்சேரி அரசு விடுவிக்காத நிலை நீடித்தால் கைதிகள் கொரோனா தொற்றினால் பெருமளவில் பாதிக்கப்படுவர்.


உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாகச்  சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  உச்சநீதிமன்றமும் ஏற்கனவே கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், புதுச்சேரி அரசு இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றாமல் சிறைக் கைதிகளை நோய்த் தொற்றுக்கு உள்ளாக்கி இருப்பது கண்டனத்துக்குரியது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...ஆன்லைன் கல்வி: தேவையற்ற வீடியோக்கள் வந்தால் காவல் நிலையத்தில் புகார் செய்யவேண்டும்: மத்திய அரசு

புதுச்சேரி அரசும், சிறைத்துறையும் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளைப் பிணையிலோ அல்லது நீண்ட காலப் பரோல் விடுப்பிலோ உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை உடனுக்குடன் விடுவித்து வருகின்றனர்.

அதேபோல், புதுச்சேரியிலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளையும் முன்விடுதலை செய்யும் வகையில் அரசாணை ஒன்றை வெளியிட வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பான மனுவை  மக்கள் வாழ்வுரிமை இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், மீனவர் விடுதலை வேங்கைகள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழர் களம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இராவணன் பகுத்தறிவு இயக்கம், செம்படுகை நன்னீரகம், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை ஆகியவை சார்பில் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading