• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா பரவலுக்கு காரணம் யார்...? விசாரணை கோரி தீர்மானம் கொண்டு வரும் 62 நாடுகள்

கொரோனா பரவலுக்கு காரணம் யார்...? விசாரணை கோரி தீர்மானம் கொண்டு வரும் 62 நாடுகள்

கோப்புப்படம்

கோப்புப்படம்

"தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், சர்வதேச விசாரணையை சீனா அனுமதிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது"

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொரோனா தொற்று பரவலுக்கு காரணம் யார் என்று விசாரணை நடத்தும்படி இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் சார்பில் உலக சுகாதார அமைப்பில் இன்று தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் போன்று, மீண்டும் ஒரு கொள்ளைநோய் பரவுவதை தடுக்க கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று கண்டறிய வேண்டும் என்று ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன.

    இந்நிலையில், இதுதொடர்பாக பாகுபாடின்றி, சுதந்திரமாக , விரிவான விசாரணை நடத்தக் கோரி ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து உலக சுகாதார அமைப்பில் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளன.

    இதற்கு இந்தியா, ஜப்பான், பிரிட்டன், பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனடிப்படையில், இன்று கூட உள்ள உலக சுகாதார அமைப்பின் 73-வது கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக சுதந்திரமான விசாரணை கோரி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

    இந்த தீர்மானம் எதிர்ப்புகளின்றி விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், சர்வதேச விசாரணையை சீனா அனுமதிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: