மாநிலத்தின் 37% பாதிப்பு ஒரே நகரத்தில்.. பெங்களூருவை மிரட்டும் கொரோனா...

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய நகரங்கள் பட்டியலில் மும்பையை பின்னுக்கு தள்ளி, பெங்களூரு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

மாநிலத்தின் 37% பாதிப்பு ஒரே நகரத்தில்.. பெங்களூருவை மிரட்டும் கொரோனா...
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 11:15 AM IST
  • Share this:
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீயிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் 83,809 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,30,000மாக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80,000ஐ கடந்துள்ளது.  இந்தியாவின் மொத்த பாதிப்பில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான பாதிப்புகள் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இந்த 4 மாநிலங்களில் தான் 50,000க்கும் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

படிக்க...கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.... முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன..?


நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக உள்ள புனேவில், 2,32,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 2வது இடத்தில் உள்ள டெல்லியில் 2,18,000 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகரிக்கும் பாதிப்புகள் காரணமாக மும்பையை பின்னுக்கு தள்ளி, அதிகம் பாதிக்கப்பட்ட 3வது நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது.

பெங்களூருவில் இதுவரை ஒரு லட்சத்து 70,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்புகளில் 37 விழுக்காடு பாதிப்புகள் பெங்களூருவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 3-வது இடத்தில் இருந்தாலும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் பெங்களூரு 2-வது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க..கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.... முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன..?சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையில் புனே முதலிடத்திலும், மும்பை 3வது இடத்திலும் உள்ளன. எனினும் பிற நகரங்களை ஒப்பிடும் போது பெங்களூருவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

இதுவரை பெங்களூருவில் கொரோனா தொற்றால் 2,436 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ள நகரமாக உள்ளது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading