வெளிநாட்டிலிருந்து சீனாவுக்கு மீண்டும் பரவும் கொரோனா..!

வெளிநாட்டிலிருந்து சீனாவுக்கு மீண்டும் பரவும் கொரோனா..!
மாதிரிப்படம்
  • Share this:
சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவிய நிலை மாறி தற்போது வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு கொரோனா மீண்டும் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடம்படித்துள்ளது. சீனாவை விட இத்தாலியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கடுத்து ஈரான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது.

சர்வதேச அளவில் கொரோன வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 370 பாதிக்கப்பட்டும் 6 பேர் உயிரழந்தும் உள்ளனர். கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் அதன் தாக்கம் வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளது.


கடந்த இரு நாட்களாக சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத நிலையில் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்த குவாங்டாங்கைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது. முதல்முறையாக வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் மூலமாக சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்