3 மாத இடைவெளியில் வியட்நாமில் மீண்டும் பரவும் கொரோனா

வியட்நாமில் 3 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனை தொடர்ந்து டா நாங் நகரிலிருந்து 80,000 சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

3 மாத இடைவெளியில் வியட்நாமில் மீண்டும் பரவும் கொரோனா
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா வைரஸ் பரவலை சிறப்பான நடவடிக்கைகள் மூலம் தடுத்த நாடுகளில் ஒன்று வியட்நாம். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வியட்நாமில், வெளிநாட்டினர் வருவதற்கு தொடக்கத்திலேயே தடைவிதிக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து வரும் உள்ளூர் மக்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதன்மூலம், 420 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பரவியிருந்தது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், நூறு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான டா நாங்-கில் 57 வயதான நபருக்கு கடந்த சனிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவருடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்ததில் அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில், மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.


இந்த 4 பேரில் ஒருவர், அருகிலுள்ள குவாங் நுகாய் மாகாணத்திலிருந்து வந்தவர். 4 பேருக்கும் உள்ள தொடர்பு குறித்து கண்டறியப்படவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

உள்ளூர் அளவில் கொரோனா பரவியதைத் தொடர்ந்து, டா நாங் நகரில் சுற்றுலாவுக்கு அரசு தடைவிதித்துள்ளது. நகரில் உள்ள 80,000 சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக, டா நாங் பகுதியிலிருந்து 11 நகரங்களுக்கு தினமும் 100 விமானங்கள் இயக்கப்படுகின்றன. 4 நாட்களில் அனைத்துப் பயணிகளும் வெளியேற்றப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.டா நாங் நகருக்குள் சுற்றுலாப் பயணிகள் நுழைய 14 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நகரில் வசிக்கும் மக்கள் அனைவரும் தனிநபர் இடைவெளியை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்றும் முகக் கவசம் அணிய வேண்டும என்றும் பிரதமர் நுகுயேன் சுவான் பக் உத்தரவிட்டுள்ளார். 30 பேருக்கு மேல் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

சொந்த ஊருக்கு திரும்புவோர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மருத்துவமனைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் கால்பந்து போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க... சச்சின் டெண்டுல்கரின் மனைவி, நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட வி.ஐ.பிகளிடம் நில மோசடி

வடகொரியாவில் முதல்முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், வியட்நாமிலும் நோய் பரவியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading