கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதா? - 12 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளில் ஆய்வு

பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு வெளியாகவுள்ளது.

கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதா? - 12 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளில் ஆய்வு
கோப்புப்படம்
  • Share this:
இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதா என்பதை கண்டறியும் வகையில் பொதுமக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்தது.

பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பது அறியும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதன்படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வை நடத்த ஐசிஎம்ஆர் உத்தரவிட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணமாலை ஆகிய மாவட்டங்களும் இந்த பட்டியலில் உள்ளன. சென்னையில் ஐசிஎம்ஆர் மற்றும் காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மாநகராட்சியுடன் இணைந்து இந்த ஆய்வை செய்தது.


Also read: வடகொரியா தன் அணு ஆயுதத்தை ஏவுகணையில் பொருத்த வாய்ப்பு - ஐ.நா அறிக்கை

பல்வேறு இணை நோய் உள்ளவர்கள், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ளவர்கள், தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள், காவல் துறையினர், ஊடக துறையினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள், உள்ளாட்சி துறை ஊழியர்கள், பொது போக்குவரத்து ஊழியர்கள், வங்கி, அஞ்சல் சேவை ஊழியர்கள், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் ஊழியர்கள், விமான துறை ஊழியர்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 12,000 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இந்த மாதிரிகளில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. எலிசா பரிசோதனை முறையில் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டு, அதன் அளவை கொண்டு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, இல்லையா என்பதை கண்டறிய பணிகளை நடைபெற்றுவருகிறது. இந்த ஆய்வுகளின் முடிவு இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading