அறிகுறிகள் இல்லாத கொரோனா - கண்டறியப்பட்ட 'சைலண்ட் ஹைபாக்சியா’ பிரச்னை

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில், 90 சதவிகித பேருக்கு அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிகுறிகள் இல்லாத கொரோனா - கண்டறியப்பட்ட 'சைலண்ட் ஹைபாக்சியா’ பிரச்னை
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: June 18, 2020, 4:37 PM IST
  • Share this:
அறிகுறிகள் தோன்றாத நிலையிலும் பலருக்கு சைலண்ட் ஹைபாக்சியா எனும் பிரச்னை ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. சைலண்ட் ஹைபாக்சியா என்றால் என்ன?

ரத்தத்தில் ஆக்சிஜன் குறையும் நிலையே சைலண்ட் ஹைபாக்சியா என கூறப்படுகிறது. இந்த நோயால் நுரையீரலில் பல்வேறு ரத்த கட்டிகள் ஏற்பட்டு நுண்ணிய ரத்த நாளங்கள் அடைப்படுகின்றன. இதனால் நுரையீரலின் முக்கிய வேலையான ரத்தத்தை தூய்மை செய்து ஆக்சிஜனேற்றம்(Oxidation state) செய்வதில் தொய்வை ஏறபடுத்துவதுடன், மூளை செயல்பாடு ஆகியவை பாதிக்கப்படக்கூடிய அபாயமும் உள்ளது.

நிமோனியா, ப்ளூ போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்தால் கண்டிப்பாக அதற்கான அறிகுறிகள் இருக்கும். ஆனால் கொரோனா நோயாளிகளில் அறிகுறிகள் இல்லை. ஆக்சிஜன் அளவு 50க்கும் கீழ் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு அது தெரியாமலே நடப்பதாக கூறுகிறார் மருத்துவர் அஸ்வின்.

படிக்கஇந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து
படிக்ககைகலப்பு முதல் உயிரிழப்பு வரை - லடாக் எல்லையில் 45 நாட்கள் நடந்தது என்ன?
சைலண்ட் ஹைபாக்சியா நுரையீரல் பாதிப்பு மட்டுமல்லாமல் ரத்த நாளங்களையும் பாதிக்கும். எனவே ஆக்சிஜன் குறைவாக உள்ளது என கண்டறிந்தால் உடனே அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளித்தால்தான் நோயாளிகளை காப்பாற்ற முடியும் என்கிறார் இருதய நிபுணரான மருத்துவர் நரசிம்மன்.

தற்போதைய சூழலில், இதற்கான தீர்வு எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சைலண்ட் ஹைபாக்சியா இருக்கிறதா என்பதை அறிய பல்ஸ் ஆக்ஸீ மீட்டர் போன்றவை வைத்து அறிகுறி உள்ளவர்கள் தங்களை சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக மூச்சுவிட சிரமமாக உணர்தல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளே சைலண்ட் ஹைபாக்சியாவுக்கான முதன்மை அறிகுறியாக கூறும் மருத்துவர்கள், இவை தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

 
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading