• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • எளிமையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்... சென்னையில் 10 இடங்களில் ரத்த மாதிரி சேகரிப்பு மையங்கள்!

எளிமையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்... சென்னையில் 10 இடங்களில் ரத்த மாதிரி சேகரிப்பு மையங்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

  • Share this:
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 பகுதிகளில் கொரோனா ரத்தமாதிரி சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னையில் இதுவரை 182 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னை முழுவதும் வீடுவீடாக சென்று 86 லட்சம் பேருக்கு கொரோனா அறிகுறிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 775 நபருக்கு அறிகுறிகள் உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், அறிகுறிகள் உள்ளவர்கள், தனிமைப் படுத்தப் பட்டவர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களது தெருக்களில், வீடுகளின் அருகில் வசிப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ளலாம்.

இதற்காக, சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் 10 இடங்களில் "கொரோனா மாதிரிகள் சேகரிப்பு மையம்" அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மக்கள் தாமாகவே முன்வந்து தங்களது இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு கொடுக்கலாம். இங்கிருந்து, இந்த மாதிரிகள் ஆய்வகங்களுக்கு எடுத்துச் சென்று பரிசோதித்து முடிவுகள் தெரிவிக்கப்படும்.

சென்னையில் அதிக பாதிப்பு உள்ள இடங்களை கண்டறிந்து இந்த மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள அந்தந்த மையங்களில் தங்கள் மாதிரிகளை அளிக்கலாம்.

பகுதி வாரியாக மையங்களின் விபரங்கள்...

தண்டையார்பேட்டை - காலரா மருத்துவமனை
ராயபுரம் - புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் உள்ள பல் மருத்துவமனை. பெரியமேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலை, கடப்பா ரங்கையா தெரு . பிராட்வே - பிரகாசம் சாலை, பாரதி பெண்கள் கலை கல்லூரி.

திருவிக நகர் - ஓட்டேரி, நியூ பாரன்ஸ் சாலை, சமூக நலக்கூடம். அண்ணாநகர் - கலெக்டர் காலனி, 6 வது குறுக்கு தெரு, அங்கன்வாடி மையம். தேனாம்பேட்டை - திருவல்லிக்கேணி, நடேசன் சாலை, பாரதி அவன்யூ. கோடம்பாக்கம் - விருகம்பாக்கம், ஏ வி எம் அவென்யூ, சமூக நலகூடம். அடையாறு - தரமணி, 100 அடி சாலை, கோதாவரி தெரு. திருவான்மியூர் - திருவள்ளுவர் நகர், 1 வது அவென்யூ. பெருங்குடி - கொட்டி வாக்கம், ஏ ஜி எஸ் காலனி, உள்விளையாட்டு அரங்கம்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: