• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

  • Share this:
கொரோனா அதிகம் உள்ள பகுதிகளில் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன்படி மே மாதங்களில் சென்னையில் 1000க்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டன. பின்னர், சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 1400க்கும் மேற்பட்ட தொற்றுகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது.

இந்நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் புதிய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்றைய நிலவரப்படி 61 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 38 பகுதிகள் கட்டுப்படுத்த பகுதிகளாக உள்ளன. அதிக தொற்று பாதிப்பு உள்ள ராயபுரம் மண்டலத்தில் கட்டுப்படுத்த பகுதிகள் இல்லை.

மேலும், திரு.வி.க.நகரில் 3 பகுதிகளும், அம்பத்தூரில் 2 பகுதிகளும், அண்ணா நகரில் 8 இடங்களும், கோடம்பாக்கத்தில் 17 இடங்களும், வளசரவாக்கத்தில் 9 இடங்களும், அடையாறில் ஒன்றும், சோழிங்கநல்லூரில் 4 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. ராயபுரம், தேனாம்பேட்டை உள்ளிட்ட 6 மண்டலங்களில் எந்தப் பகுதியும் கட்டுப்படுத்தப்படவில்லை.

Also see:

ஜுன் 15ம் தேதி சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 369ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக ஜுன் 21-ம் தேதி 61ஆக குறைந்தது. தற்போது இன்று மீண்டும் 90 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 28 நாட்கள் புதிய தொற்று இல்லாத பட்சத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன்பின், அது 14 நாட்களாக கண்காணிப்பு குறைக்கப்பட்டது.

மேலும், ஒரு நபருக்கு தொற்று ஏற்பட்டால் ஒட்டுமொத்த வீதியின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தாமல், பாதிக்கப்பட்ட நபரின் குடியிருப்பை மட்டும் கண்காணிப்பது என வழிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், ஒரு தெருவில்  5 புதிய தொற்று கண்டறியப்பட்டால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் படிப்படியாகக் குறைந்த இந்த எண்ணிக்கை, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: