CoronaVirus : வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 300 டன் கொரோனா நிவாரண பொருட்கள் : 5 நாட்களில் 25 விமானங்கள்

CoronaVirus : வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 300 டன் கொரோனா நிவாரண பொருட்கள் : 5 நாட்களில் 25 விமானங்கள்

கொரோனா நிவாரண பொருட்கள்

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடந்த 5 நாட்களில் 25 விமானங்களில் கொரோனா நிவாரண பொருட்கள் வந்திருப்பதாக டெல்லி விமான நிலையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலையின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவை மீட்பதற்கு பல்வேறு உலக நாடுகள் உதவி பொருட்களை அனுப்பி வருகின்றன. அவ்வாறு அனுப்பப்டும் மருத்துவ, நிவாரண பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் டெல்லி விமான நிலையத்துக்கு வந்து சேர்கின்றன.

    கடந்த 28 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும் 25 விமானங்களில் சுமார் 300 டன் பொருட்கள் வந்திருப்பதாகவும், இவை பெரும்பாலும் விமானப்படை விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் டெல்லி விமான நிலையம் கூறியுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பொருட்களை கையாளுவதற்காக விமான நிலையத்தில் 3,500 சதுர மீட்டர் பரப்பளவை ‘ஜீவோதய் கிடங்கு’ என்ற பெயரில் ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட பொருட்களில் 5,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், சுமார் 3,200 சிலிண்டர்கள், 9.28 லட்சம் முககவசங்கள், 1.36 லட்சம் ரெம்டெசிவிர் ஊசிமருந்துகள் ஆகியவை உள்ளன.

    இந்த பொருட்கள் பெரும்பாலும் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, ஐக்கிய அமீரகம், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, கத்தார், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஒரேநாளில் 20,952 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 12,28,064 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 18,016 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 10,90,338 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் கொரோனா பாதிப்பால் 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,368 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 217 பேர் மரணமடைய அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை 16,011 ஆக அதிகரித்துள்ளது.

    Must Read : மளிகை, காய்கறி கடைகள் மதியம் 12 வரை திறக்க அனுமதி - மற்ற கடைகள் திறக்க தடை - தமிழக அரசு புதிய கட்டுப்பாடு

     

    மகாராஷ்டிரா மாநிலரத்தில், 70,284 மரணங்களுடன் முதலிடம் வகிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 669 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 4,622 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றியுள்ளது. இதேபோல நாடு முழுதிலும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,417 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published: