திருச்சியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு 14 வகையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் அமைந்துள்ள 2,866 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் அமைந்துள்ள 2,866 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு, அவர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை உள்ளிட்ட 14 வகையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

  இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் அமைந்துள்ள 2,866 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அச்சமின்றி பணிபுரியவும், வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருவதாகவும், எனவே மக்கள் அச்சமின்றி 100 சதவீத வாக்களிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

  மேலும் படிக்க... மாணவர்கள் முன்னிலையில் மது குடிக்கும் பள்ளி ஆசிரியர் - வைரல் வீடியோ |  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: