கடந்த 90 ஆண்டுகளில் முதன்முறையாக வெளிநாட்டவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள தடை - 1000 பேருக்கு மட்டுமே அனுமதி

இந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து ஹஜ் பயணிகள் வருவதற்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்திருக்கும் நிலையில், உள்நாட்டிலும் ஹஜ் செய்ய பல்வேறு கட்டப்பாடுகளை விதித்திருக்கிறது.

கடந்த 90 ஆண்டுகளில் முதன்முறையாக வெளிநாட்டவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள தடை - 1000 பேருக்கு மட்டுமே அனுமதி
காபா (கோப்புப்படம்)
  • Share this:
இஸ்லாமியர்கள் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகளில் கடைசியானது ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. உடல் நலத்துடனும், பொருளாதார ரீதியாக வசதிபடைத்தவராகவும் உள்ள ஒருவர், தன் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய நாட்காட்டியில் கடைசி மாதமான துல்ஹஜ் மாதத்தில் ஹஜ் புனித பயணம் செல்ல வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு, ஜூலை 19 தொடங்கி ஆகஸ்ட் 2 வரை ஹஜ் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதிலும் இருந்து இரண்டரை கோடி பேர் தங்கள் கடமையை நிறைவேற்ற, சவுதி அரேபியாவின் மக்கா நகரத்தில் சங்கமிப்பார்கள். மக்காவில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை முடித்துக்கொண்டு மற்றொரு புனித நகரமான மதினாவுக்குச் செல்வார்கள்.


தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில், சவுதி அரேபியாவில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே, இந்த ஆண்டு வெளிநாட்டவர்களுக்கு ஹஜ் செய்ய அனுமதியில்லை என்று சவுதி அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், உள்ளுர் மக்களும் ஹஜ் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.

Also see:

சவுதி குடிமக்களும் அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் திரளும் மக்காவில் இந்த ஆண்டு வெறும் 1000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட இருக்கின்றனர். அதிலும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சவுதி அரசு.

65 வயதிற்கு அதிகமானவர்களும், நாள்பட்ட நோயாளிகளும் ஹஜ் செய்ய இந்த ஆண்டு அனுமதியில்லை. மக்கா நகரத்திற்கு வரும் முன்னரே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவர். ஹஜ் செய்யும் காலம் முழுவதும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

காபா என்று அழைக்கப்படும் புனிதக் கட்டடத்தை யாரும் தொடவோ, முத்தமிடவோ கூடாது. காபாவைச் சுற்றும்போதும், தொழுகை நடத்தும்போதும் ஒவ்வொருவரும் ஒன்றரை மீட்டர் இடைவெளி விட வேண்டும் என்று சவுதி அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.

கடந்த 90 ஆண்டுகளில், வெளிநாட்டவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading