சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும் - சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும் - சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
  • Share this:
சென்னை அசோக் நகரில் நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின் பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் கழிவுகளை சேகரிக்க  5 பயோ மெட்ரிக் பை வழங்கப்படுவதாகவும், இதுவரை 300 டன் மாஸ்க், பிபிஇ கிட் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை 1500°சி வெப்பத்தில் எரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய ஊரடங்குதான் காரணம் என்றும் அதிகளவில் பரிசோதனை செய்து தொற்று உறுதியானவர்களுக்கு திறம்பட சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு குறைவதை காரணமாக வைத்து நோய் தடுப்பு பணிகள் நிறுத்தப்படாது, தொடர்ந்து இதே வேகத்தில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

சென்னையில் 80% மக்கள் முகக்கவசம் அணிவதாகவும்,  சென்னையில் உள்ள 89 சந்தைகளும் அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


Also see:

சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் தொடரும் என்றும் வங்கிகளில் தேவையற்ற சேவைகளை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், சென்னை மாநகராட்சியில் 44000 களப்பணியாளர்கள் இருக்கிறார்கள். அதில் 375 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 128 பேர் குணமடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.மேலும், தூய்மை பணியாளர்கள் மாஸ்க், க்ளோவ்ஸ் இல்லாமல் வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடிக்கப்படும். இறந்த தூய்மைப் பணியாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading