• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • இந்த 22 விதிமுறைகளை பின்பற்றுங்கள்...! கொரோனா முன்னெச்சரிக்கையாக காவல்துறைக்கு டிஜிபி உத்தரவு

இந்த 22 விதிமுறைகளை பின்பற்றுங்கள்...! கொரோனா முன்னெச்சரிக்கையாக காவல்துறைக்கு டிஜிபி உத்தரவு

டிஜிபி திரிபாதி

டிஜிபி திரிபாதி

காவல் நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய 22 விதிமுறைகள் குறித்து சுற்றறிக்கை.

  • Share this:
    இருமல், சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களை காவல் நிலையத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்று காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், காவல் நிலையங்களில் பின்பற்ற வேண்டிய 22 விதிமுறைகள் குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதன்படி, காவல் நிலையத்துக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் மனுதாரர்களை உடல் வெப்ப சோதனை மேற்கொண்டபிறகே அனுமதிக்க வேண்டும். பார்வையாளர்கள் நுழையும் அனைத்துப் பகுதிகளிலும், கிருமிநாசினியை வைத்திருக்க வேண்டும்.

    நல்ல காற்றோட்டமுள்ள பகுதிக்கு மட்டுமே பார்வையாளர்கள் மற்றும் மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும். குளிர்சாதன வசதி கொண்ட பகுதிகளில் பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    காவலர்கள் அத்தியாவசியமற்ற கூட்டங்களை நடத்தக் கூடாது. கேன்டீனில் மதிய நேரத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதோடு, அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    மறுஉத்தரவு வரும் வரை, உடற்பயிற்சி மையங்கள், பொது விளையாட்டுப் பகுதிகள் ஆகியவற்றை மூட வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.




    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: