உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கு கொரோனா

யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  உத்தர பிரதேசத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமை படுத்திக்கொண்டார்.

  இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “கொரோனா தொற்று உறுதியான அதிகாரிகள் என்னுடன் தொடர்பில் இருந்ததால், என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். அனைத்து பணிகளையும் ஆன்லைன் முறையில் துவங்க உள்ளேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

  Must Read : இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? : நிர்மலா சீதாராமன் விளக்கம்

   

  இந்நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த வாரம் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: