ரிசல்ட் வரும் முன்பே டிஸ்சார்ஜ் ஏன்...? கொரோனா பாதித்த நபர் மாயம்... மருத்துவமனை குளறுபடி.. பரபரப்பு தகவல்கள்...!

ரிசல்ட் வரும் முன்பே டிஸ்சார்ஜ் ஏன்...? கொரோனா பாதித்த நபர் மாயம்... மருத்துவமனை குளறுபடி.. பரபரப்பு தகவல்கள்...!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: April 9, 2020, 11:04 AM IST
  • Share this:
விழுப்புரத்தில் மாயமான கொரோனா பாதித்த நபரை தேடும் பணி இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதார மனிதவள மேம்பாட்டு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் பலர் கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

ஆரம்ப கட்ட பரிசோதனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட 26 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவர அவர்கள், 28 நாட்கள் கண்காணிப்பு காலத்தில் வைக்கப்பட்டனர். நேற்றுடன், கண்காணிப்பு காலம் முடிவடைந்த நிலையில், அவர்கள் டிஸ்சார்ஜ்ச் செய்யப்பட்டனர்.


அவர்கள், வெளியேறிய சில மணி நேரங்களில் இரண்டாவது பரிசோதனை முடிவுகள் வர, அதில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. நால்வரில் மூவர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் உடனே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

டெல்லியைச் சேர்ந்த 30 வயதான நபரை தேடும் பணி இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. புதுச்சேரிக்கு வேலை நிமித்தமாக வந்து, விபத்து வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அந்த நபர், கடந்த மாதம் 16-ம் தேதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. இதனால், டெல்லி திரும்புவதற்காக அங்கிருந்த லாரி டிரைவர்கள் உடன் பழகியுள்ளார். எனினும், அவரால் ஊர் திரும்ப முடியவில்லை. இதற்கிடையே, கொரோனா அறிகுறிகளால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.முதல் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வரவே, கண்காணிப்பில் வைக்கப்பட்ட அவர், நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இரண்டாவது ரிசல்டில் கொரோனா பாசிடிவ் ஆகியுள்ளது.

போக்குவரத்து வசதிகள் இல்லாததால், அந்த நபர் அதிக தொலைவு சென்றிருக்க முடியாது என்று கணித்துள்ள காவல்துறை, அண்டை மாநிலமான புதுச்சேரி, மாவட்டங்களான திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலும் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, மாயமான நபரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவுவதால், அவர் மக்களால் தாக்கப்படும் அபாயம் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். மருத்துவமனை பணியாளர்களின் குளறுபடியால் இந்த தவறு நிகழ்ந்திருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading