Home /News /coronavirus-latest-news /

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்...!

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்...!

ராஜீவ் காந்தி மருத்துவமனை

ராஜீவ் காந்தி மருத்துவமனை

"தலைமறைவாக உள்ள அந்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்"

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்றுவந்த நபர் தப்பியோடினார்.

சென்னை கோயம்பேடு சின்மயா நகர் பகுதியை சேர்ந்தவர் 43 வயது நபர் ஒருவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிப்புரிந்து வருகின்றார்.

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கேட்டில் பணிப்புரிந்த தொழிலாளர்கள் பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதால் அனைவருக்கும்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது இவருக்கு கடந்த 12-ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து தப்பியோடி உள்ளார். இதனால் தலைமறைவாக உள்ள அந்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி