மற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று

இரு மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பரிசோதனை முடிவுகளில் விரைவிலேயே கொரோனா உறுதி செய்யப்படுகிறது

மற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: June 4, 2020, 8:36 PM IST
  • Share this:
மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா பாதிப்பும் இறப்புகளும் அதிகமாக உள்ளன. மகாராஷ்ட்ராவில் 74,860 பேர் பாதிக்கப்பட்டு அதில் 2587 பேர் இறந்துள்ளனர். குஜராத்தில் 18 ,117 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தாலும், அங்கு 1122 பேர் இறந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று வரை 208 பேர் இறந்து, இறப்பு சதவீதம் 0.8 ஆக உள்ளது. இதுவே மகாராஷ்ட்ராவில் 3.46% மற்றும் குஜராத்தில் 6.19% ஆக உள்ளது. எனவே அந்த மாநிலங்களில் பரவும் கொரோனா வைரஸின் தன்மையில் மாற்றங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது.

தற்போது செய்யப்படும் பிசிஆர் பரிசோதனை உடலில் நோய் தொற்று உள்ளதா? இல்லையா? என்று உறுதி செய்ய மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த பரிசோதனையின் மூலம் எவ்வளவு தொற்று உள்ளது அதாவது viral load எவ்வளவு என்று கண்டறிய முடியாது. ஆனால் மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு பரிசோதனை செய்யும் போது பரிசோதனையின் ஆரம்பத்திலேயே நோய் தொற்று உறுதி செய்யப்படுகிறது.


மற்றவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படும் நேரத்தை விட இந்த மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு சீக்கிரமே தொற்று உறுதி செய்யப்படுகிறது.

உலக அளவில் இதுவரை கொரொனா வைரஸில் 198 மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவை எதுவுமே வைரஸின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடியவை அல்ல. எனவே சிகிச்சை முறையிலோ, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலோ எந்த வித பெரிய மாற்றமும் செய்ய அவசியம் ஏற்பட்டதில்லை.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்து நோய் தொற்று கண்டறியப்பட்டவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுபவதற்கு முன் பரிசோதனை செய்து நெகடிவ் என்று முடிவு தெரிந்த பிறகே வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.மகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து வருபவர்கள் பெரும்பாலும் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு திரும்பியுள்ளனர்.


First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading