மதுரையில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு... இன்று எவ்வளவு தெரியுமா?

கொரோனா பாதிப்பில் தொடர்ந்து உச்சம் பெற்று வந்த மதுரையில் இன்று 96 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. 

மதுரையில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு... இன்று எவ்வளவு தெரியுமா?
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் கொரோனா தொற்று துவங்கியதிலிருந்து தொடர்ந்து எண்ணிக்கையை பதிவு செய்யும் பகுதியாகவும் முதல் பலியை பதிவு செய்ததும் மதுரையில் தான்.

தற்போது  சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் தான் கொரோனா தீவிரம் காட்டி வருகிறது. ஒற்றை படையிலிருந்து இரட்டை படைக்கு மாறிய எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மூன்று படை எண்ணிக்கையாக மாறியது.நேற்று நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 988 ஆக இருந்தது. குணமடைந்தோர் எண்ணிக்கை 405 ஆக இருந்த நிலையில் சிகிச்சையில் 574 பேர் உள்ளனர். இறந்தவர் எண்ணிக்கை 9 ஆக கூறப்பட்டுள்ளது.

Also read... லட்சம் பேரில் ஒருவர் மட்டுமே மரணம்...! உலகிலேயே இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக் குறைவு

இன்று ஒரே நாளில் 96 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1084 ஆனது.தொடர்ந்து குணமாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆறுதல் தந்தாலும், தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் 90க்கு மேல் இருந்து வருவது கவலையளித்து வருகிறது. படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வரும் நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading