சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் கொரோனா பரவல் - தமிழகத்தின் நிலவரம் என்ன?

சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகரித்துவருகிறது.

சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் கொரோனா பரவல் - தமிழகத்தின் நிலவரம் என்ன?
கோப்புப் படம்
  • Share this:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தொடர்ந்து திருவண்ணாமலை, மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 44,200-க்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதைத்தொடர்ந்து அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டில் 4 ஆயிரம் பேரும், திருவள்ளூரில் 2,800 பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தை தொடர்ந்து திருவண்ணாமலையில் 1,300 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், நேற்று ஒரே நாளில் 110 பேருக்கும், கடந்த ஒருவாரத்தில் 330 பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


தென்மாவட்டமான மதுரையில் இதுவரை 988 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஒருவாரத்தில் தொற்று பாதிப்பு இரு மடங்காக அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு 500ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் கடந்த ஒருவாரத்தில் 340 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோரும், தூத்துக்குடி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்டோரும் ஒருவாரத்தில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அரியலூர், கள்ளக்குறிச்சியில் தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ள போதிலும், இரு மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது.Also see:

திண்டுக்கல், திருச்சி, சேலம், ராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. அதில், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒருவாரத்தில் 150 பேருக்கும், சேலம், திண்டுக்கல், தஞ்சை மாவட்டங்களில் 100 பேருக்கும் மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கோவை, தேனி, தென்காசி, திருவாரூர், விருதுநகர் மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. இதில், விருதுநகர் தவிர பிற 4 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200க்கும் குறைவாகவே உள்ளது. அதேநேரம், தருமபுரி, நீலகிரியில் ஒருவாரத்தில் தொற்று எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்படாததால், அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமே கிடையாது என்ற நிலை உருவாகியுள்ளது.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading