ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு - அனைத்து மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ள பிரதமர் மோடி

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு - அனைத்து மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ள பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: April 8, 2020, 4:07 PM IST
  • Share this:
ஏப்ரல் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ம் தேதி, பிரதமர் மோடி ஊரடங்கு நிலையை அமல்படுத்தினார். 21 நாட்கள் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீடிக்க கோரிக்கை விடுத்துள்ளன. இன்று நடந்த அனைத்துக்கட்சிகள் கூட்டட்திலும், ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தால், ஆட்சேபம் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஊரடங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இந்த நிலையில், வரும் 11-ம் தேதி மீண்டும் அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். ஏற்கனவே, இரண்டு முறை அவர் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இம்முறை ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.




இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading