தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26-ஆனது

நேற்று பிற்பகலில் சேலத்தில் மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26-ஆனது
கோப்புப் படம்
  • Share this:
கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 8 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.

நேற்று காலை வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18-ஆக இருந்தது. மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். நேற்று பிற்பகலில் சேலத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் நால்வர் இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்கள் ஆவர். மற்றவர் அவருடைய சுற்றுலா வழிகாட்டியாகச் செயல்பட்டவர்.

இந்நிலையில் நேற்றிரவு புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக சுகாதாரத் துறை, ரயிலில் சென்னைக்கு வந்த கொரோனா பாதித்த வடமாநில நபருடன் தொடர்பில் இருந்த 18 வயது இளைஞருக்கும், துபாயில் இருந்து திரும்பிய 63 வயது முதியவருக்கும், தாய்லாந்தில் இருந்து வந்தவருடன் தொடர்புடைய தமிழக நபருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. பின்னர், இத்தகவலை அமைச்சர் விஜயபாஸ்கரும் வெளியிட்டார்.


இதன் மூலம் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர், சேலத்தில் எங்கெங்கு சென்றனர்:

இந்தோனேஷியாவில் இருந்து மார்ச் 11-ஆம் தேதி, சேலம் வந்த அவர்கள் 12ஆம் தேதி சூரமங்கலம் ரஹ்மத் நகர் மசூதிக்குச் சென்றிருக்கின்றனர். பின்னர், 13, 14, 15 தேதிகளில் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் மசூதிக்குச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து 16,17,18ல் அம்மாப்பேட்டை ஷேக் உமர் மசூதிக்கும் 19,20,21ல் சன்யாசிகுண்டு புஹாரியா மசூதிக்கும், 22ஆம் தேதி ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் மசூதிக்கும் சென்றிருக்கின்றனர். சுற்றுலா வந்த அனைவரும் 23ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 16 பேரிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில், 5 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.இதுகுறித்து பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், கொரோனா பாதித்த சுற்றுலாப் பயணிகள் சென்ற மசூதிகளுக்கு சென்றவர்கள், தாமாக முன்வந்து தங்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சுகாதாரத்துறை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே மசூதிக்குச் சென்று வந்தவர்களைத் தனிமைப்படுத்தும் பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. அவர்களுடைய கைகளில் முத்திரையிடப்பட்டு வருகிறது.

Also see:

 

 
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading