கொரோனா சிகிச்சை படுக்கையில் சி.ஏ தேர்வுக்கு படிக்கும் இளைஞர்: இணையத்தில் பாராட்டைப் பெற்ற புகைப்படம்

ஒடிசா இளைஞர்

கொரோனா பாதித்து சிகிச்சையில் இருக்கும்போது சார்டட் அக்கௌண்ட் தேர்வு தயாரிக்குக்கொண்டிருந்த இளைஞரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. யாரும் எதிர்பாராதவகையில் இரண்டாவது அலை சுனாமி போன்ற தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிவருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கெனவே, மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  அதேபோல, தமிழகத்திலும், திரையரங்குகள், பெரிய கடைகள் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதித்து சிகிச்சையில் இருக்கும் பலரும் மன உளைச்சலில் இருக்கும் வாய்ப்பு அதிகம். பலருக்கும் இங்கிருந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். இதற்கு மத்தியில் கொரோனா பாதித்து மருத்துவமனையில் இருக்கும் இளைஞர் ஒருவர் சி.ஏ தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தார்.


  அந்தப்புகைப்படத்தை ஒடிசாவின் கஞ்சம் மாவட்ட ஆட்சியர் விஜய் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘வெற்றி என்பது தன்னிச்சையானது அல்ல. உங்களுக்கு அர்பணிப்பு தேவை. நான் கொரோனா மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டேன். அப்போது, இந்த இளைஞர் சி.ஏ தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தார். உங்களுடைய அர்பணிப்பு உங்களுடைய வலியைப் போக்கும். அதன்பிறகு, வெற்றிதான் உங்களுக்கு’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்துக்கு 24 பேர் லைக்கிட்டுள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: