சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் செல்ல தயாரான விமானத்தில் பயணித்த கொரோனா நோயாளி கண்டுப்பிடிக்கப்பட்டதால், புறப்பட்ட விமானம் நிறுத்தப்பட்டு, கொரோனா நோயாளி பயணியை கீழே இறக்கி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் இதனால் விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று காலை 9 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. அந்த விமானத்தில் 85 பயணிகள் இருந்தனா். விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியபோது அதில் பயணம் செய்த ஹைதராபாத்தை சோ்ந்த ஒரு ஆண் பயணி அதிகமான இருமல், சளி தொல்லையால் அவதிப்பட்டார். இதையடுத்து சகபயணிகள் சந்தேகப்பட்டு விமான பணிப் பெண்களிடம் தெரிவித்தனா்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக விமான பணிப்பெண்கள் அந்த பயணியை விசாரித்தனா். அதோடு, அவரிடம் உள்ள கொரோனா பரிசோதனை சான்றிதழை வாங்கி ஆய்வு செய்தனா். அதில் அந்த பயணிக்கு கொரோனா பாசிடீவ் என்றிருந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த விமான பணிப் பெண்கள், விமானிக்கு தகவல் கொடுத்தனா்.
இது குறித்து, விமானி உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதோடு சுகாதாரத்துறைக்கும் தகவல் கொடுக்ப்பட்டது. இதையடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. அங்கே, விமானநிலைய அதிகாரிகள், சுகாதாரத்துறையினா் விரைந்து வந்தனா்.
அவர்கள்,
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான பயணியை அவசரமாக விமானத்தை விட்டு கீழே இறக்கினா். அவருக்கு கவச
பாதுகாப்பு உடை அணிவித்து தனி ஆம்புலன்ஸ்சில் ஏற்றி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனா்.
இதற்கிடையே விமானத்திலிருந்த சக பயணிகள் அதிச்சியடைந்து, விமான ஊழியா்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனா். இதையடுத்து 84 பயணிகள் மற்றும் விமான ஊழியா்கள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனா். சுகாதாரத்துறையினா் கிருமிநாசினி மருந்தடித்து விமானத்தை சுத்தப்படுத்தினா். அத்துடன் பயணிகள் அனைவரும் கிருமிநாசினி மருந்தால் தங்களை சுத்தப்படுத்தி கொண்டனா்.
Must Read : சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
அதன் பின்னர் விமானத்தில் பயணிகள் 84 பேரும் ஏற்றப்பட்டு காலை 10.30 மணிக்கு, ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது. இச்சம்பவம்
சென்னை விமானநிலையத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.