கொரோனா தடுப்பு மருந்து - நம்பிக்கையை அதிகரித்துள்ள போட்டி

கொரோனா பெருந்தொற்றுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து, முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து - நம்பிக்கையை அதிகரித்துள்ள போட்டி
covid vaccine
  • News18
  • Last Updated: July 21, 2020, 9:23 PM IST
  • Share this:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் , AstraZeneca நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்த தடுப்பு மருந்து, முதல் இரண்டு கட்ட சோதனைகளில் வெற்றி கண்டுள்ளது. இது தொடர்பான முடிவுகளை மருத்துவ இதழான லான்செட் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 18 வயது முதல் 55 வயது வரையான ஆயிரத்து 77 பேருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருந்து செலுத்தி சோதிக்கப்பட்டது. ஏப்ரல் 23ம் தேதி முதல் மே 21 வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. 28 நாட்கள் ஆய்வின் முடிவில் சோதனையில் பங்கேற்ற ஆயிரத்து 77 பேருக்கும் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை என்று லான்செட் இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தடுப்பு மருந்தானது மனிதர்களுக்கு செலுத்துவதில் பாதுகாப்பாக உள்ளதாகவும், கொரோனா கிருமிக்கு எதிரான வலுவான எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. முதல் கட்ட சோதனையில் வெற்றி கண்டதை அடுத்து 10 கோடி மருந்துகளை இங்கிலாந்து வாங்கியுள்ளது. இந்நிலையில், தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட சோதனை, பிரேசிலில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பரிசோதனை அமெரிக்காவில் பெரிய அளவில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இதனிடையே, இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தான கோவேக்சினை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த பரிசோதனைக்கு ஆயிரத்து 800 பேர் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு என்றும், முதல்கட்ட பரிசோதனையில் 4 முதல் 6 வாரங்கள் கொரோனா நோயாளிகள் கண்காணிக்கப்பட உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
படிக்க: மரத்தை வெட்டி சிபிஐ அதிகாரியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்படிக்க: புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்சில் நடந்த பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது
சீனாவும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் போட்டியில் வெற்றிகண்டுள்ளதாக லான்செட் இதழின் ஆசிரியர் ரிச்சர்ட் ஹார்டன் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த நாடுகளின் மருந்துகள் சோதனைகளில் பலன் அளித்து வருவதால் கொரோனாவுக்கு மருந்து விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

மேலும் அதிக மருந்துகளை உலகில் பெரிய அளவில் சோதிக்கவேண்டிய தேவை இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் மைக்கிள் ரயன் தெரிவித்துள்ளார்.

 
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading