கொரோனாவைக் கட்டுப்படுத்த தயவு செய்து செயல்படுங்கள்: எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு வைத்த 9 அம்ச கோரிக்கைகள் என்ன?

பிரதமர் மோடி

மத்திய அரசு எதை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் உட்ப்ட 12 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

 • Share this:
  கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்து மரண விகிதங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 9 முக்கிய அம்சங்களை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

  மத்திய அரசு எதை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் உட்ப்ட 12 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

  கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

  கொரோனாவை தடுப்பது பற்றி நாங்கள் தனித்தனையாகவும் சேர்ந்தும் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். ஆனால் மத்திய அரசு அவற்றையெல்லாம் புறக்கணிக்கிறது. இதனால்தான் பிரச்னை தற்போது தீவிரமடைந்துள்ளது. எனவே இந்த 9 நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் மட்டுமே நிலைமை சீரடையும்.

  அந்த 9 அம்ச கோரிக்கை வருமாறு:

  சர்வதேச மற்றும் உள்ளூரில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி தடுப்பூசிகளை, மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும். நாடு முழுதும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும்

  உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க லைசென்ஸ் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும்

  பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட, 35 ஆயிரம் கோடி ரூபாயை, தடுப்பூசிக்காக பயன்படுத்த வேண்டும்

  புதிய பார்லிமென்ட் கட்டும் திட்டத்தை நிறுத்தி வைத்து, அந்தத் தொகையை, ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிக்கு பயன்படுத்த வேண்டும்

  'பிஎம்கேர்ஸ்' நிதியில் உள்ள இதுவரை கணக்கு காட்டப்படாத தொகையை முழுமையாக பயன்படுத்தி, தடுப்பூசி, ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும்

  வேலையில்லாதோருக்கு, மாதம், 6,000 ரூபாய் வழங்க வேண்டும்

  தேவைப்படும் அனைவருக்கும் உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும்

  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில், விவசாய சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்தக் கடிதத்தை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  சிவசேனா தலைவரும், மகாராஷ்ட்ரா முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,ஆகியோர் எழுதியுள்ளனர்.
  Published by:Muthukumar
  First published: