முகப்பு /செய்தி /கொரோனா / வேமகாக பரவும் கொரோனா பி.எஃப்.7 ஒமைக்ரான்... அறிகுறிகள் என்னென்ன?

வேமகாக பரவும் கொரோனா பி.எஃப்.7 ஒமைக்ரான்... அறிகுறிகள் என்னென்ன?

ஒமிக்ரான் பி.எஃப்.7 அறிகுறிகள்

ஒமிக்ரான் பி.எஃப்.7 அறிகுறிகள்

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எளிதில் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்

  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaChinaChina

பிஎஃப்.7 ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவில் பிஎஃப்.7 ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இவ்வகை வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிஎஃப்.7 ஒமைக்ரான் வகை தொற்று, பிஏ 5 ஒமைக்ரான் வைரஸின் மரபணுவை சேர்ந்தது.

  • இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது.
  • இந்த வகை மக்களை எளிதில் பாதிக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூட மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • மருத்துவ அறிக்கைகளின்படி, BF.7 மாறுபாடு பெரும்பாலும் மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது.
  • உடலில் இவ்வகை வைரஸின் அடைகாக்கும் காலம் மிகவும் குறைவாகும்.
  • இவ்வகை வைரஸ் பாதிப்பால், வழக்கமான தொற்றை போலவே காய்ச்சல், இருமல், சோர்வு ஆகியவை ஏற்படும்.
  • தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எளிதில் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்
  • சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60 % மக்கள் வரை தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படும் நிலையில், அடுத்த சில மாதங்களில் சுமார் 10 லட்சம் இறப்புகள் ஏற்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வகை கொரோனா இந்தியாவிலும் கண்டறியப்பட்ட நிலையில், விமான நிலையங்களில், சர்வதேச பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

First published:

Tags: Corona, Covid-19, Omicron Symptoms