ஹோம் /நியூஸ் /கொரோனா /

corona numbers in India today | அதிகரிக்கும் பாதிப்பு, மரணங்கள்: ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா, 3915 பேர் இறப்பு

corona numbers in India today | அதிகரிக்கும் பாதிப்பு, மரணங்கள்: ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா, 3915 பேர் இறப்பு

படம். | பிடிஐ

படம். | பிடிஐ

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரையில்லாத வகையில் 4.14 லட்சம் பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், 3,915 பேர் உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இது தொடர்பாக மத்திய சுகாதரத் துறையின் அறிக்கை வருமாறு:

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது.

  தற்போது கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 36 லட்சத்து 45 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத் தொற்றில் 16.96 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து ஒரு கோடியே 76 லட்சத்து 12 ஆயிரத்து 351 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் சதவீதம் 81.95 ஆகக் குறைந்துள்ளது.

  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3 ஆயிரத்து 915 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 34 ஆயிரத்து 83ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 853 பேர் உயிரிழந்துள்ளனர்.

  டெல்லியில் 335 பேரும், சத்தீஸ்கரில் 212 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 350 பேரும், குஜராத்தில் 123 பேரும், கர்நாடகாவில் 328 பேரும், ஜார்க்கண்டில் 133 பேரும், ராஜஸ்தானில் 161 பேரும், பஞ்சாப்பில் 154 பேரும், உத்தரகாண்டில்151 பேரும்,மே வங்கத்தில் 117 பேரும், தமிழகத்தில் 195 பேரும் உயிரிழந்துள்ளனர்.

  ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 29 கோடியே 86லட்சத்து ஆயிரத்து 699பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 18லட்சத்து 26 ஆயிரத்து 490 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன''.

  இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 21.5% அதாவது ஐந்தில் ஒரு நபருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று சோதனையில் தெரியவருகிறது.

  ஒடிசாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 12,238 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. புதிய தொற்று விகிதம் 16.31% ஆக அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 3 வாரங்களில் கொரோனா மரணங்கள் இரட்டிப்பாகியுள்ளது. உ.பியில் 75 மாவட்டங்கள் இருக்கிறது என்றால் சுமார் 36 மாவட்டங்களில் கொரோனா மரணங்கள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு அதிகமாகியுள்ளது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Corona death, COVID-19 Second Wave