கொரோனா தொற்று எண்ணிக்கையில் பொய்க் கணக்கா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதாக பொய்க்கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லையென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று எண்ணிக்கையில் பொய்க் கணக்கா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
அமைச்சர் ஜெயக்குமார்
  • Share this:
சென்னை திருவல்லிக்கேணியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில், கொரனோ தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ராயபுரம் மண்டலத்தை பொறுத்தவரை தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. எப்போது முழுமையாக குறையும் என்பது உலக சுகாதார மையத்திற்கு தான் தெரியும்.

சென்னையை பொருத்தவரை அதிகளவு காய்ச்சல் முகாம் அமைக்கபட்டு 8 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பரிசோதிக்கபட்டுள்ளனர் .


முககவசம், தனிமனித இடைவெளி, கை கழுவுவதை பின்பற்றுவதன் மூலம் கொரனோவை எதிர்க்க முடியும். தொற்றின் தாக்கம் குறைவதற்கு நீண்ட காலம் என்பதால் அதுவரை மக்களை நாம் கட்டி போடமுடியாது. அதே நேரத்தில் அவர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதால் ஊரடங்கை தளர்த்தினோம்.

Also read... கல்லூரிகளில் இறுதி பருவ தேர்வுகளை நடத்த தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு

தற்போது தொற்று எண்ணிக்கை குறைவாக கணக்குக் காட்டுவதாக கூறுவது தவறானது பொய்க்கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.முதலமைச்சர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். அமைச்சர் அன்பழகனுக்கு தொற்று ஏற்பட்டதால் அவருடன் இருந்த நான் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டேன் நெகட்டிவ் என ரிசல்ட் வந்த பிறகு தான் வெளியே வந்தேன் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading