நடிகர் கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஏன்? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்

கோப்புப் படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனாவில் இருந்து எங்களை காக்க தனிமைப்படுத்திக்கொண்டோம் என்ற மாநகராட்சியின் ஸ்டிக்கர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீட்டில் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர்களும் ஒப்பட்டுள்ளன.

  இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வீட்டிலும் கொரோனா ஸ்டிக்கர் ஓட்டப்பட்டிருந்தது.

  மாநகராட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில், கொரோனாவில் இருந்து எங்களையையும் சென்னையையும் காக்க தனிமைப்படுத்திக்கொண்டோம் என்று எழுதப்பட்டதுடன் கமல்ஹாசனின் பெயர் மற்றும் முகவரி இடம்பெற்றிருந்தது.

  எனினும், வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஒட்டப்படும் ‘கொரோனா எச்சரிக்கை / உள்ளே நுழையக்கூடாது” என்ற வாசகங்கள் இந்த ஸ்டிக்கரில் இடம் பெறவில்லை.

  எனினும், கமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்த போது பாஸ்போர்ட் அடிப்படையில் வந்த தகவலை அடுத்து கமலஹாசனின் கட்சி அலுவலகம் தனிமைப்படுத்தப் பட்டதாக நோட்டீஸ் ஓடியதாகவும் இதையடுத்து இந்த அலுவலகத்தில் யாரும் இல்லை என தகவல் வந்ததையடுத்து நோட்டீசை அப்புறம் படுத்தியதாகவும் விளக்கம் அளித்தனர்.

  சமீபத்தில் பேட்டியளித்த ஸ்ருதிஹாசன், குடும்பத்தில் எல்லோரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: