கமல்ஹாசனின் அலுவலகத்தில் கொரோனா நோட்டீஸ்... கவுதமியின் முகவரியால் நிகழ்ந்த குழப்பம்...!

கமல்ஹாசனின் அலுவலகத்தில் கொரோனா நோட்டீஸ்... கவுதமியின் முகவரியால் நிகழ்ந்த குழப்பம்...!
கமல்ஹாசன் கவுதமியுடன் பாபநாசம் படத்தில்...
  • News18
  • Last Updated: March 28, 2020, 3:54 PM IST
  • Share this:
நடிகை கவுதமி வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட வீடாக நோட்டீஸ் ஓட்டுவதற்கு பதிலாக கமல் கட்சி அலுவலகம் தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியதால் குழப்பம் ஏற்படுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன்படி தமிழகம் முழுவதும் யார் யாரெல்லாம் வெளிநாடு சென்று தமிழகம் திரும்பி உள்ளார்களோ அவர்கள் அனைவரும் இல்லத்திலும் தனிமைப்படுத்தப்பட்டு இந்த இல்லம் தனிமைப்படுத்தப்பட்ட இல்லம் என அரசு சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன் கட்சி அலுவலம் வெளியே தனிமைப்படுத்தப்பட்ட இல்லம் என மாநகராட்சி சார்பில் முதலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த நோட்டீசை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர் .


இது குறித்து மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்த போது நடிகை கவுதமி சமீபத்தில் வெளிநாடு சென்று தமிழகம் திரும்பியுள்ளார். அதனால் அவரது இல்லம் தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும் என்பதால் அவரது பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை வைத்து மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. ஆனால், கவுதமி பாஸ்போர்ட்டில், கமலஹாசனின் கட்சி அலுவலகம் முகவரி இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து கவுதமி அங்கு இல்லை என்பதால் நோட்டீஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், அந்த முகவரியில் தான் தங்கவில்லை என்றும் கட்சியின் அலுவலகம் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் தன்னை இரு வாரங்களுக்கு முன்னரே தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading