8 மாதங்களாக தொடரும் கொரோனா தடுப்பு பணி - மருத்துவ ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்பு

கோப்புப்படம்

8 மாதங்களாக கொரோனா தடுப்பு பணி தொடரும் நிலையில், குடும்பத்தை பிரிந்து பணியாற்றுவதால் மருத்துவ பணியாளர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி அனைத்து செயல்பாடுகளையும் ஸ்தம்பிக்க வைத்தாலும் மக்களுக்காக இடைவிடாது சில சேவை பணிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.  அதில் மிக முக்கியமானது மருத்துவ சேவை பணி, கொரோனா நோயாளிகளை பார்த்தாலே பதறி ஒட்டம் பிடிக்கும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்து தங்கள் உயிரையும் இழந்துள்ளனர் சிலர். பலரோ தங்கள் குடும்பங்களை மாதக்கணக்கில் பிரிந்து தனிமை முகாம்களில் தங்கியுள்ளனர்.

நோயாளிகளுடனேயே எட்டு முதல் பத்துமணி நேரம் ஒரே அறையில் இருந்து சிகிச்சை கொடுத்து மகத்தான சேவை செய்யும் மருத்துவத்துறையினர் பணி முடிந்தாலும் கொரோனா தொற்று காரணமாக தங்கள் வீட்டிற்கு போக முடியாமல் உள்ளனர் குடும்பத்தை பிரிந்தும், தங்கள் குழந்தைகளை பிரிந்தும் தொடர் பணிச்சூழல் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.



தொடர் மருத்துவ சேவையில் உள்ளவர்கள் தங்கள் நண்பர்களுக்குள் குழுக்களை அமைத்து கலந்துரையாடல் செய்வது, வீடியோ கால் மூலமாக குடும்பத்தினருடன் பேசுவது நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது மூலமாக மன அழுத்தத்தை போக்கலாம் என்று சொல்லும் மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்களின் பணியை உணர்ந்து பொது மக்களும் கூட்டமாக மருத்துவமனை வருவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
Published by:Sankar
First published: