கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன் - வீடியோ!

கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன் - வீடியோ!
மணிரத்னம் மகன் நந்தன்
  • Share this:
லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய இயக்குநர் மணிரத்னத்தின் மகன் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளார்.

கொரோனா பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை சோதிக்கும் அரசு அதிகாரிகள் அவர்களுக்கு வைரஸ் தொற்று இருந்தால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கின்றனர். வைரஸ் தொற்று இல்லாதவர்களை வீட்டிலேயே 14 முதல் 16 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பிய இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தன் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “நந்தன் 18-ம் தேதி லண்டனில் இருந்து இந்தியா வந்ததாகவும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும், 14 நாட்கள் அவர் தனிமையில் இருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.


நந்தன் கூறும்போது, தனிமையில் இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என்றாலும் 14 நாட்கள் தனிமையில் இருப்பது நமக்கும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நல்லது என்றும், இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் வீட்டில் தனக்கு உணவு கொடுக்கும் முறை எப்படி தனிமைப்படுத்திக் கொள்வது என்பதையும் இந்த வீடியோவில் நந்தன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க: படப்பிடிப்புகள் ரத்து: ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை படங்களின் நிலையென்ன?
First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்