• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஒரு மண்டலத்தில் இருந்து பிற மண்டலங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு

ஒரு மண்டலத்தில் இருந்து பிற மண்டலங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு

இ-பாஸ்

இ-பாஸ்

சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்பவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்பவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், மாநிலத்திற்குள் ஒரு மண்டலத்தில் இருந்து பிற இடங்களுக்குச் செல்பவர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்புவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது

    அதன்படி, ஒரு மண்டலம் அல்லது மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களுக்குள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், சொகுசு வாகனங்கள், பேருந்துகள் அல்லது ரயிலில் பயணிப்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு மண்டலத்தில் இருந்து பிற மண்டலங்களுக்குச் செல்பவர்கள் இ-பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கொரோனா அறிகுறி உடன் வருபவர்களுக்கு மட்டும் பரிசோதனை நடத்தலாம். சென்னை மண்டலத்தில் இருந்து பிற இடங்களுக்கு செல்பவர்கள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

    தொற்று இல்லாத நபர்களை வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் பணம் செலுத்தி அரசின் தனிமை முகாம்களில் தங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வர்த்தக நோக்கில் பயணம் செய்து 48 மணி நேரத்திற்குள் திரும்பக் கூடியவர்களைத் தனிமைப்படுத்தத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து ரயில், விமானம் மூலம் வருபவர்கள் இ-பாஸ் வைத்திருக்க வேண்டிய நிபந்தனை தொடரும். தொற்று பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, குஜராத், டெல்லியில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். தொற்று இல்லாவிட்டால் வீட்டிலோ அல்லது அரசு தனிமை முகாம்களில் பணம் செலுத்திவிட்டோ 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களில் அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டும் பரிசோதனை நடத்தலாம் என்றும், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: