கேரளா, கர்நாடகா, ஆந்திரா செல்ல விரும்புகிறீர்களா? SETC சார்பில் தொடர்பு எண் அறிவிப்பு

பேருந்துகள் ( கோப்புப் படம்)

"வெளி மாநிலம் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்"

  • Share this:
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் செய்ய நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை அரசு விரைவு பேருந்து அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்றனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 3 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17-ம் தேதிக்கு பின்னர் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக சொந்த மாநிலம் மற்றும் வேலைகளுக்கு செல்ல முடியாமல் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு துறை சார்பிலும் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் வசிக்கும் நபர்கள் தொழில் சார்ந்த பயணம் மேற்கொள்ள தமிழகத்தை ஒட்டி இருக்கும் மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலம் செல்ல 044-24794709 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசினால் செல்ல வேண்டிய மாநிலத்துக்கு ஏற்ப திட்டமிட்டு பேருந்து செல்லும் நேரம் அவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்படும் எனவும் விரைவு பேருந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்பாக ஏற்கெனவே வெளி மாநிலம் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sheik Hanifah
First published: