ராகுல் காந்தி வெளியிட்ட இதயத்தை உலுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலை குறித்த வீடியோ!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்கள் குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்ட இதயத்தை உலுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலை குறித்த வீடியோ!
ராகுல் காந்தி வெளியிட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலை
  • Share this:
கொரோனா காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் மாநில அரசுகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதனிடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்கள் குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், இது ஒரு கடினமான நேரம். அனைவரின் பாதுகாப்பிலும் நாங்கள் நிற்கிறோம். அவர்களின் அலறல்கள் அரசாங்கத்தை சென்றடையும். என ட்வீட் செய்துள்ளார்.

 சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading