கொரோனா பாதித்த கொளத்தூர் மணியின் உடல்நிலையில் முன்னேற்றம் - விடுதலை ராஜேந்திரன்

கொளத்தூர் மணி

கொளத்தூர் மணியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுமக்களைக் கடந்து திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், சமூக செயற்பாட்டாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணிக்கு கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  இந்தநிலையில், கொளத்தூர் மணியின் உடல்நிலை குறித்து விடுதலை ராஜேந்திரன் ஃபேஸ்புக் பதிவில், ‘கொரோனா பாதிப்பினால் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நலம் பெற்று வருகிறார். வெளியில் இருந்து தரப்படும் ஆக்சிஜன் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, அவரது உடலின் ஆக்சிஜன் அளவு அதிகரித்து வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

  உரிய மருத்துவ சிகிச்சைகளும், உடற் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள் அறிவுரைப்படி அலைபேசி அழைப்புகளை தவிர்த்து வருகிறார். முழுமையாக நலம் பெறும் வரை மருத்துவமனையில் அவர் இருக்க வேண்டி இருக்கும். விரைவில் நலம் பெற்று திரும்புவார். உடல் நலம் நன்றாக தேறி வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: