கொரோனா தொற்றால் தமிழகத்தில் இதுவரை 63 மருத்துவர்கள் உயிரிழப்பு: ஐஎம்ஏ

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 382 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவற்றில் தமிழகத்தில் 63 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் இந்திய மருத்துவக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 11:42 AM IST
  • Share this:
கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்களுடன் சேர்த்து, நோய் தொற்றுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் ஏற்கனவே 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் 63 மருத்துவர்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 382 மருத்துவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை போல் எந்த நாட்டிலும் மருத்துவர்களோ, மருத்துவ ஊழியர்களோ கொரோனாவுக்கு பலியாகவில்லை எனவும், உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றிய புள்ளி விவரங்களையும் அரசு முறையாக பராமரிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க...2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தல்: கமல்ஹாசன், ரஜினிகாந்த் நிலைப்பாடு என்ன?



இறந்த மருத்துவர்களை தியாகிகளாக மதிக்க வேண்டும் எனவும், அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றும் ஐ.எம்.ஏ.தலைவர் ராஜன் சர்மா தெரிவித்துள்ளார்.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading