கொரோனா வைரஸால் ஆன்லைன் டேட்டிங் ஆப்-களில் அலைமோதும் இளைஞர்கள்..!

திருமணத்தை மீறிய உறவை வைத்துக்கொள்ளும் ஆப்-ல் 70 சதவீதம் சந்தாதாரர்கள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் ஆன்லைன் டேட்டிங் ஆப்-களில் அலைமோதும் இளைஞர்கள்..!
ஆன்லைன் டேட்டிங் ஆப்
  • Share this:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவுக்கு முன்பே தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியது.

இப்படி நாடே கொரோனாவிடமிருந்து தப்பிக்க விடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் இன்று கிளீடன் டேட்டிங் ஆப் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வில் நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள் முடங்கியிருக்க அவர்களின் பிரதான தகவல் தொடர்பு இணைய சேவை மட்டும்தான். மக்கள் ஒருவரையொருவர் தொடாமல் இருக்க வேண்டும் என்று கூறியதால் தங்கள் நண்பர்கள், உறவினர்களையும் இணையத்தின் மூலமே தொடர்பு கொள்கின்றனர்.


இந்நிலையில், இளைஞர்களும் வீட்டில் இருக்கும் நேரத்தில் டேட்டிங் ஆப்-களில் நேரம் கழிப்பதாகத் தெரிவித்துள்ளது. வழக்கத்தைக் காட்டிலும் கிளீடன் ஆப்-ன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதுவும் திருமணமானவர்கள் திருமணத்தை மீறிய உறவை வைத்துக்கொள்ளும் ஆப்-ல் 70 சதவீதம் சந்தாதாரர்கள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.வீட்டில் முடங்கியிருக்கும்போது போர் அடிப்பது சகஜம்தான் என்றாலும் வீட்டில் இருக்கும் மனைவி, அம்மா, அப்பா என குடும்பத்தாருடன் நேரம் கழிக்காமல் இந்த நேரத்திலும் ஆன்லைனில் உறவு கொண்டாடுவது சரியா என்பது பலரது கேள்வியாக உள்ளது.வீட்டில் இருக்கும் சமயத்தில் வீட்டை சுத்தம் செய்யலாம், பார்க்க நினைத்த படங்கள், சீரியல்களைக் காணலாம். புத்தகங்கள் படிக்கலாம். திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம். பேச்சுத் திறன், அறிவுத் திறன் இப்படி இதுநாள் வரை கிடைக்காத நேரம் தற்போது கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தள்ளி வைத்த விஷயங்கள் தூசி தட்டி எடுங்கள். இதற்கே உங்களுக்கு நேரம் போதாது. வீட்டி போரும் அடிக்காது.

படிக்க :

வீட்டில் அலுவலகப் பணி செய்யக் கூடியவை..செய்யக் கூடாதவை என்ன?

வெயில் காலத்தில் சந்தனத்தின் மகிமையைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்...!
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்