கொரோனா சமூக, பொருளாதாரப் பிரச்னையும்தான் - முதல்வருக்கு ஜோதிமணி பதிலடி

ஜோதிமணி MP

கேரளா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

 • Share this:
  கொரொனா தொற்று ஒரு மருத்துவப் பிரச்னை மட்டுமல்ல சமூகப், பொருளாதாரப் பிரச்னையும்தான் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

  தமிழக அரசின் குறையைச் சுட்டிக்காட்டாமல் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கூறினால் பரிசீலிக்கப்படும் என்றும் கொரோனா நோய் பரவலைத் தடுக்க தேவை அனைத்துக் கட்சி கூட்டம் அல்ல, மருத்துவர்களின் ஆலோசனை மட்டுமே என்றும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்தக் கருத்தை ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார்.

  அவருடைய ட்விட்டர் பதிவில், "தமிழக முதல்வர் அவர்களே கொரொனா தொற்று ஒரு மருத்துவப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு சமூகப், பொருளாதாரப் பிரச்சினையும் கூட. அதனால்தான் கேரளா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்த தவறான புரிதல் தமிழகத்திற்கு நல்லதல்ல. தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.

  Also see:
  Published by:Rizwan
  First published: