நாடு முழுவதும் ஒரே நாளில் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று : பாதிப்பு 1.5 கோடியை தாண்டியது

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.5 கோடியை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  இந்தியாவில் ஒரே நாளில் 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.5 கோடியை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களாக 24 மணி நேர கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகின்றது.

  அதன்படி, நேற்று ஒரு நாளில் நாடு முழுவதும் புதிதாக 2,73,810 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவாக 68,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1.5 கோடியை தாண்டி விட்டது. 1,50,61,919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களில் 25 லட்சம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை 1,29,53,821 பேர் குணமடைந்துள்ளனர். இது, மொத்த பாதிப்பில் 86 சதவீதம் ஆகும்.

  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 19,29,329 உள்ளது. 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 503 பேரும், சத்தீஷ்காரில் 170 பேரும், டெல்லியில் 161 பேரும், உத்தரபிரதேசத்தில் 127 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.

  இந்நிலையில், தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 10,941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 6,172 பேர் கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

  Must Read :  நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

   

  கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: