இந்தியாவில் கிராமப்புறங்களில்தான் கொரோனா தொற்று மிக அதிகம் - ஐ.சி.எம்.ஆர்

இந்தியாவில் கிராமப்புறங்களில்தான் கொரோனா தொற்று மிக அதிகம் - ஐ.சி.எம்.ஆர்

ஐ.சி.எம்.ஆர்

இந்தியாவில் மே மாத தொடக்கத்திலேயே 64 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், தற்போது கிராமப்புறங்களில் 69 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதும் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா எனப்படும் நோய்க்கிருமித் தொற்று குறித்த கள ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மேற்கொண்டது. கடந்த மே 11-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை 700 கிராமங்களில் சுமார் 28,000 பேரிடம் கொரோனா சோதனை நடத்திய ஐசிஎம்ஆர், அது தொடர்பான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

  அதில், பெரும்பாலான மாவட்டங்களில் காணப்படுகின்ற குறைவான பாதிப்பு இந்தியா தொற்று நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதைக் குறிப்பதாகவும், பெரும்பாலானோர் 2-வது முறையாக நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 18 முதல் 45 வயதுடையவர்களில் 43.3 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், 46 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 39.5 சதவீதம் பேருக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 17.2 சதவீதம் பேருக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...நியாயமான ஆம்புலன்ஸ் சேவை கட்டணத்தை மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு  மேலும், கிராமப்புறங்களில் கொரோனா தொற்று மிக அதிகமாக 69.4 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 30.6 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த ஆய்வின் அடிப்படையில் மே மாத தொடக்கத்திலேயே 64 லட்சத்து 68,388 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: