Home /News /coronavirus-latest-news /

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மருத்துவர்கள் இருவேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் தாக்கத்தை விட இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. கடந்த ஆண்டு சென்னையின் உச்சபட்ச பாதிப்பு எண்ணிக்கையான 2,100 என்ற அளவு, இந்த ஆண்டில் தற்போதே கடந்து விட்டது. அடுத்து வரும் சில நாட்களில் சென்னை மட்டுமின்றி தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் கணித்துள்ளனர். இதுபோன்ற சூழலில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்துவது சிறந்த பலனைத் தராது என்கிறார் மருத்துவர் அஷ்வின். முழு ஊரடங்கின் காரணமாக சில நாட்களில் பாதிப்பு குறைந்தது போல் தோன்றினாலும், ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் எனவும் கூறுகிறார்.

    ஆனால், தமிழகத்தில் இப்போது உள்ள நிலைமை தொடர்ந்து நீடித்தால், கண்டிப்பாக முழு ஊரடங்கு தேவைப்படும் என்கிறார் மருத்துவர் அருணாசலம். தமிழக மக்கள் இனியும் அலட்சியமாக இருந்தால், மகாராஷ்ட்ராவை போன்ற அபாயகரமான நிலை தமிழகத்திலும் ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கிறார்.

    கொரோனா 2வது அலை : மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை

    அவசியமற்ற பணிகளுக்கு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் தீவிர கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்கிறார் தமிழ்நாடு அரசின் சிறப்பு வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் பிரதீப் கவுர்.

    இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் கவுர் வெளியிட்டுள்ள பதிவில், கூட்டம் கூடும் எந்த நிகழ்ச்சிகளையும் மூன்று மாதங்களுக்கு நடத்தக் கூடாது என்றும், அரசு அறிவித்துள்ளதை விட கடுமையான கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். பொருளாதாரத்தை பாதிக்காமல், அவசியமற்ற பணிகளை தவிர்த்து, மக்கள் தொடர்ந்து முகக் கவசம் அணிந்தால், கொரோனா தொற்று நிச்சயம் கட்டுக்குள் வரும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார் மருத்துவர் பிரதீப் கவுர்.

    மேலும் படிக்க... தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா தொடக்கம்...



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Lockdown, Tamil Nadu

    அடுத்த செய்தி