சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. அலட்சியம் காட்டும் அலுவலகங்கள்.. மருத்துவர்களின் அறிவுரை என்ன?
சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. அலட்சியம் காட்டும் அலுவலகங்கள்.. மருத்துவர்களின் அறிவுரை என்ன?
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அலுவலகங்களில் தொற்று பரவுவது எப்படி? என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.
சென்னையில் கடந்த 3 வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில், கடற்கரை சாலை, அண்ணா சாலை, தியாகராய நகர் மற்றும் அண்ணா நகரில் தொற்று அதிகரிக்க அலுவலகங்களே காரணமாக உள்ளன. 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளதால், தனிமனித இடைவெளி, மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருப்பதே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்,
அலுவலகங்களில் ஒரு கணினியை பலர் பகிர்ந்து பயன்படுத்தும்போது மாஸ்க் அணிவதோடு, கையுறை அணிவதும் அவசியம். இல்லையெனில், ஏற்கெனவே தொற்று பாதித்தவர் பயன்படுத்திய கணினியை மற்றவர்கள் பயன்படுத்தும்போது அவர்களுக்கும் தொற்று பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், 100 சதவீத பணியாளர்களை வரவழைப்பதை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.